×

கொளக்கியம்மன், பொன்னியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்: சயனபுரம் கிராமத்தில் விழாக்கோலம்

நெமிலி:  நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் கொளக்கியம்மன், பொன்னியம்மன் கோயில்  திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம்  கிராமத்தில் கொளக்கியம்மன், பொன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா நாட்டாண்மைதாரர்கள் மற்றும் கிராம மக்கள் ஏற்பாட்டின்பேரில் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் திருவீதி உலா வந்து அருள்பாலித்தனர். அப்போது, வீடுகள்தோறும் பக்தர்கள் அம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது….

The post கொளக்கியம்மன், பொன்னியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்: சயனபுரம் கிராமத்தில் விழாக்கோலம் appeared first on Dinakaran.

Tags : Kolakiamman ,Ponniyamman Temple Festival ,Festival Kolam ,Sayanapuram ,Nemili ,Sayanapuram village ,Ponniamman temple festival ,
× RELATED முதல்வர் வருகையையொட்டி தர்மபுரி விழாக்கோலம் பூண்டது