×

துருவ் விக்ரம் ஜோடியானார் அனுபமா

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த படம், அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கபடி விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என தொடர்ந்து வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரிக்கிறது. இந்தக் கதை, ஒரு மனிதன் விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, வன்முறையற்ற அமைதியான மரணமற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக போராடும் போராட்டத்தை விவரிக்கிறது.

The post துருவ் விக்ரம் ஜோடியானார் அனுபமா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Duruv ,Anupama ,Chennai ,Mari Selvaraj ,Ablast Entertainment ,Neelam Studios ,Duruv Vikram ,Jodianaar Anupama ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராஞ்சா படப்பிடிப்பு முடிந்தது