×

‘குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாற வாய்ப்பில்லை!’: தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு அதிகளவில் பரவியது தொடர்பான WHO ஆய்வில் தகவல்!!

ஜெனீவா :குரங்கு அம்மை நோய் சர்வதேச அளவில் பெருந்தொற்றாக மாறாது என உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் அயல் நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. ஆப்ரிக்க போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது வரை 24 நாடுகளில் 400க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் ம்,மற்றவர்களுக்கு குரங்கு அம்மை பரவ காரணமாக இருக்கிறார்களா என்று இதுவரை உறுதியாகவில்லை. இருப்பினும் இதனால் உயிரிழப்பு அபாயம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 300 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சர்வதேச அளவில் பெருந்தொற்றாக மாற வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அது தற்செயலாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அனைவருக்கும் நோய் பரவும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post ‘குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாற வாய்ப்பில்லை!’: தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு அதிகளவில் பரவியது தொடர்பான WHO ஆய்வில் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : WHO ,Geneva ,World Health Organization ,Corona ,pandemic ,
× RELATED இந்தியாவில் 20 கோடி மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்