×

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இரு அலகுகள் நிறுத்தம்: 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 மற்றும் 3-வது அலகுகள் நிறுத்தப்பட்டதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக 5 அலகுகளிலும் மின் உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக 5 அலகுகளிலும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், 2 மற்றும் 3-வது அலகுகள் திடீரென இன்று நிறுத்தப்பட்டன. பராமரிப்பு பணி காரணமாக இரு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 அலகுகள் நிறுத்தப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.    …

The post தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இரு அலகுகள் நிறுத்தம்: 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Analmin Station ,Thoothukudi ,Tutukudi ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவர் பைக் எரிப்பு