×

வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!

பாகிஸ்தானின் 3வது உயரிய சிவிலியன் விருதான சிதரா பாகிஸ்தான் விருதை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது நேற்று அவருக்கு வழங்கப்பட்டது. அந்த புகைப்படத்தை டேரன் சமி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானில் நடைபெறும் சூப்பர் லீக் போட்டிகளில் ஆடிய ஒருசில வெளிநாட்டு வீரர்களில் டேரன் சமியும் ஒருவர். 2009-ல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பிறகே பாதுகாப்புப் பிரச்னை காரணமாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் செல்லவில்லை. இந்த ஆண்டுதான் இலங்கையும், ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானில் நடந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 3 வடிவ கிரிக்கெட்டிலும் ஆடியுள்ள டேரன் சமி 30 டெஸ்ட் போட்டிகளில் 1323 ரன்களையும் 84 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் 5 அரைசதங்கள் அடங்கும். இதுபோல் 126 ஒரு நாள் போட்டிகளில் 1871 ரன்களையும் 81 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும் இருமுறை டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டனான டேரன் சமி, 2016 முதல் 2020 வரை  பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்டில் பெஷாவர் ஜால்மி அணிக்காக ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது….

The post வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Indies ,West Indies ,Darren ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...