×

‘ஒடேலா 2’ பர்ஸ்ட் லுக் வெளியானது: சிவசக்தி வேடத்தில் தமன்னா

ஐதராபாத்: மது கிரியேஷன்ஸ், சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் பன்மொழி படம், ’ஒடேலா 2’. அசோக் தேஜா இயக்கும் இதில் சிவசக்தி வேடத்தில் நடிக்கும் தமன்னாவின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. ஓடிடியில் வெளியான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ படத்தின் 2ம் பாகமாக ‘ஒடேலா 2’ உருவாக்கப்படுகிறது. காசியில் படப்பிடிப்பு நடக்கிறது. சம்பத் நந்தி திரைக்கதை எழுத, டி.மது தயாரிக்கிறார். நேற்று மகா சிவராத்திரியையொட்டி, சிவசக்தியாக தமன்னா இடம்பெற்றுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த கேரக்டருக்காக தமன்னா தன்னை முழுமையாக மாற்றியுள்ளார். அடர்ந்த முடிகளுடன் நாக சாது போல் உடை அணிந்து, ஒரு கையில் புனித தடியும், மற்றொரு கையில் டமாருவையும் ஏந்தி, நெற்றியில் மஞ்சள் பொட்டு மற்றும் குங்குமத்துடன் சிவசக்தியாக தோன்றுகிறார். காசி விஸ்வநாதரை நோக்கி அவர் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்வதை பார்க்கலாம்.

The post ‘ஒடேலா 2’ பர்ஸ்ட் லுக் வெளியானது: சிவசக்தி வேடத்தில் தமன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Madhu Creations ,Sampath Nandi Teamworks ,Tamannaah ,Sivashakti ,Ashok Teja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தியேட்டரை விட்டுவிட்டு ஓடிடிக்கு...