×

மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் இயக்கத்தில் தனுஷ்

சென்னை: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட டைரக்டர் சிதம்பரத்தின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. சிதம்பரம் எஸ்.பொடுவால் இயக்கினார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.

இதற்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ‘குணா’ குகையில் நடக்கும் கதையும், இளையராஜா இசையமைத்த ‘கண்மணி அன்போடு’ பாடலும் இதில் இடம்பெற்றது. அது தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், தனுஷ் உள்ளிட்டோர் இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டினர்.

இந்த நிலையில், தனுஷ் நடிக்கவுள்ள 54வது படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் – சிதம்பரம் சந்திப்பின்போதி இதுகுறித்து பேசப்பட்டது என்றும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

 

The post மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் இயக்கத்தில் தனுஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Manjummal ,Dhanush Chidambaram ,Chennai ,Dhanush ,Chidambaram ,Chidambaram S. Podu ,Saubin Shair ,Srinath Bashi ,Balu Varghese ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மே 5 முதல் ஓடிடியில் மஞ்சும்மல் பாய்ஸ்