×

ராவணனாக நடிக்க யஷ்ஷுக்கு ரூ.100 கோடியா?

மும்பை: ராமாயணம் பான் இந்தியா படத்தில் ராவணன் கேரக்டரில் நடிக்க யஷ்ஷுக்கு ரூ.100 கோடி சம்பளம் தரப்படுவதாக தகவல் பரவியுள்ளது. பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் ‘ஆதிபுருஷ்’ என்ற பான் இந்தியா படம் வெளியானது. இப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக, சில வசனங்களுக்காக இப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் ராமாயணம் கதையை மீண்டும் இந்தியில் படமாக்கி, அதை பான் இந்திய மொழிகளில் திரைக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது.

ஆமிர்கானின் தங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்குகிறார். ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். சீதையாக சாய் பல்லவி, அனுமனாக சன்னி தியோல் நடிக்கிறார்கள். இதில் வில்லனாக நடிக்க யஷ்ஷிடம் பேசி வந்தனர். அவர் ரூ.100 கோடி சம்பளம் கேட்டு வந்ததாகவும் இது தொடர்பாக பேச்சு நடந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் கேட்கும் சம்பளத்தை தர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

The post ராவணனாக நடிக்க யஷ்ஷுக்கு ரூ.100 கோடியா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yash ,Ravana ,Mumbai ,Yashsh ,India ,Prabhas ,Keerthy Sanon ,Pan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ்...