×

கின்னஸ் சாதனையாளர் இயக்கத்தில் சத்தியமங்கலா

சென்னை: உலகின் அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவரும், தனது குறும் படத்துக்காக பல சர்வதேச விருதுகளை வென்றவருமான ஆர்யன், ‘சத்தியமங்கலா’ என்ற பான் இந்தியா படத்தை இயக்குகிறார். இதை ஏஎஸ்ஏ புரொடக்‌ஷன், ஐரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.சங்கர், சசிரேகா நாயுடு இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, பாங்காக், இலங்கை, நேபாளம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு இடைவிடாமல் நடக்கிறது.

‘கோலிசோடா’ முனி கிருஷ்ணா, கனக் பாண்டே, தி கிரேட் காளி (WWE உலக சாம்பியன்), பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ராதாரவி, சரிதா, ரவிகாளே, ரெடின் கிங்ஸ்லி, ‘பாகுபலி’ பிரபாகர், விஜய் சிந்தூர், மனேதேஷ் ஹிராமத், சஞ்சய் குமார் நடிக்கின்றனர். சங்கர் ஆராத்யா ஒளிப்பதிவு செய்கிறார். வீர் சமர்த் இசை அமைக்கிறார். ஸ்டீபன் எம்.ஜோசப் வசனம் எழுதுகிறார். அடர்ந்த காடு பின்னணியில், சாகசங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாக்கப்படுகிறது.

The post கின்னஸ் சாதனையாளர் இயக்கத்தில் சத்தியமங்கலா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Guinness Achiever Movement ,Pan ,India ,ASA Production ,Aira Productions ,Shankar ,Sasireka ,Satyamangala ,Guinness Achievement Movement ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை...