×

பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை-வனத்துறை எச்சரிக்கை

பழநி : பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.கோடை விடுமுறை துவங்கி உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இவர்கள் செல்லும் பழநி-கொடைக்கானல் மலைப்பகுதி இயற்கை எழில் சூழ்ந்ததாகும். இங்கு சிறுத்தை, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் பழநி-கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மீதமாகும் அல்லது அழுகிய உணவு பண்டலங்களை சாலைகளில் விலங்கினங்களுக்கு வைத்துச் செல்கின்றனர்.இதனை உண்ணும் காட்டு விலங்குகளுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் வனத்துறையினர் சாலையோரங்களில் உணவுகளை வைக்க வேண்டாமென எச்சரித்துள்ளனர். இதுகுறித்து பழநி வனச்சரகர் பழனிக்குமார் கூறியதாவது, சாலையோரங்களில் உணவுப்பொருட்கள் வைப்பவர்கள் மீது 1972 வன சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொடைக்கானல் மலைச்சாலைகளில் அமர்ந்து சிலர் மது மற்றம் புகைப்பிடிப்பது வனத்துறையினர் தணிக்கையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் பயன்படுத்தும் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளால் வன உயிரினங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன.  எனவே, மது அருந்துபவர்கள் தற்போது எச்சரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இனிவரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். …

The post பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை-வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani-Kodaikanal mountain ,PHALANI ,Palani-Kodakanal mountain ,Vulner-Kodaikanal Mountains ,
× RELATED பழனி பாலாறு பொருந்தலாறு அணையில்...