×

அதிமுக நிர்வாகிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை:  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: நீதிமன்ற உத்தரவுப்படி மணப்பாறை நகர மன்ற கூட்டம் கூட்டப்பட வேண்டும். எனவே இது குறித்து நகர மன்ற உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்ட நேரத்தில், அதிமுக  நிர்வாகிகள் 10 பேருக்கு எதிராக, மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கடந்த 25ம் தேதி நடக்க இருந்த நகர மன்றக் கூட்டத்தில் கழகக் கவுன்சிலர்கள் கலந்துகொள்ள இயலாத வண்ணம் தனிப்படை அமைத்து, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி, நடந்த நிகழ்வுகளை நீதியரசர்கள் முன் எடுத்து வைத்ததின் அடிப்படையில், உயர்நீதிமன்றம் வழக்கு சம்பந்தமாக சில உத்தரவுகளை பிறப்பித்தது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் போக்கைக் கண்டித்தும், மக்கள் பணியாற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்கள் ஆதரவோடு ஜனநாயக முறையில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post அதிமுக நிர்வாகிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,AIADMK ,Chennai ,Edappadi Palaniswami ,Manparai City Council ,
× RELATED காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: எடப்பாடி கோரிக்கை