×

ஏஐசிடிஇ சொல்லி இருந்தாலும் பின்பற்ற வேண்டியதில்லை பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை:  சென்னை தலைமை செயலகத்தில் நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக இணையவழி பதிவு எண் வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கப்பட உள்ளது. அதற்கான அட்டவணை இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முடிவுகள் வந்த பிறகு இந்த சேர்க்கை நடைபெறும். அதேபோல் பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்கள் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு சேருவதற்கான மாணவர் சேர்க்கைக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.  பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை குறைந்து வருவதால், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள், 13 பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில்  அறிமுகப்படுத்தி இருக்கிறோம். தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை உருவாக்க முதல்வர் ஒரு குழுவை நியமித்து இருக்கிறார். தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கைக்கான குழு  செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.  ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை எப்படி  இருக்க வேண்டும் என முடிவு செய்வதற்காக அந்த குழு செயல்படுகிறது.பிரதமரிடம், தமிழக முதல்வர் தமிழகத்தின் நிலைப்பாட்டையும், நமக்கான தேவைகளையும் மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் வைக்க வேண்டிய கோரிக்கைகளை வைத்ததில் எந்த தவறும் இல்லை. புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில்  தமிழ்நாடு இல்லை. பொறியியல் கல்லூரிகளுக்கு பழைய கட்டணம் தான் இந்த ஆண்டும் வசூலிக்கப்படும்.  ஏஐசிடிஇ சொல்லி இருந்தாலும் கூட அதை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அமைச்சர் பேசினார்….

The post ஏஐசிடிஇ சொல்லி இருந்தாலும் பின்பற்ற வேண்டியதில்லை பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : AICTE ,Minister ,Ponmudi ,Chennai ,Higher ,Chennai Chief ,Secretariat ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...