×

இன்று முதல் தமிழ்நாடு எனது மாநிலம்..நான் அதன் ஊழியன் :புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பெருமிதம்

சென்னை,:இன்று முதல் தமிழ்நாடு எனது மாநிலம் என்றும், நான் அதன் ஊழியன் என்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கூறினார்.சென்னை உயர் நீதிமன்றத்தில், 50வது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி, இன்று காலை 11.30 மணிக்கு பொறுப்பேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வரவேற்றார். பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் இணை தலைவர் எஸ்.பிரபாகரன், வக்கீல் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பெண் வக்கீல்கள் சங்க தலைவி லூயிசாள், லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோரும் பேசினர்.இதையடுத்து தலைமை நீதிபதி, ஏற்புரையாற்றி பேசியதாவது:உலகின் மிக பழமையான மொழி தமிழ். தமிழக கலாச்சாரம், பண்பாடு, கலைகள் என்னை வியக்கவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மிக பழமையான நீதிமன்றம். இங்கு பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன். எனது பணிக்கு வக்கீல்களான உங்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும். சிலர் மட்டுமே வக்கீல் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என நினைக்கிறார்கள். பொருளாதாரம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் சேவை முக்கியத்துவம் பெற வேண்டும். இப்போது நான் எனது மற்றொரு வீட்டுக்கு வந்துள்ளேன். இங்குள்ள கலாச்சாரத்தை கற்றுக்கொள்வேன். அரசியலமைப்பை உறுதி செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். இன்றிலிருந்து தமிழ்நாடு எனது மாநிலம். இந்த மாநிலத்தின் ஊழியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்….

The post இன்று முதல் தமிழ்நாடு எனது மாநிலம்..நான் அதன் ஊழியன் :புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Justice ,Sanjeep Banerjee ,CHENNAI ,Chief Justice Sanjeep ,Tamilnadu ,Chief Justice Sanjeep Banerjee ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய...