×

என்னால் முழுநீள ஆக்‌ஷன் படம் இயக்க முடியும்: கவுதம் வாசுதேவ் மேனன்

 

சென்னை: வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் கே.ஐசரி கணேஷ் தயாரிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம், ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’. வரும் மார்ச் 1ம் தேதி திரைக்கு வருகிறது. வருண், ராஹே ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் யோகி பாபு, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி நடித்துள்ளனர். இப்படம் குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது:

இது எனது மற்ற படங்கள் மாதிரி இல்லாமல், நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 10க்கும் மேற்பட்ட அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை ‘ஜவான்’, ‘சிட்டாடல்’ யானிக் பென் வடிவமைத்து உள்ளார். எனது ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘மின்னலே’ ஆகிய படங்கள் ரீ-ரிலீசானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘வெந்து தணிந்தது காடு’ மூலம் வேறொரு ஜானருக்கு என்னை மாற்றிக்கொண்டேன். ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’ படமும் எனக்கு வேறொரு ஜானரில் அமைந்தது. கொலையாளிகள் மற்றும் கேங்ஸ்டரிடம் இருந்து எப்படி ஹீரோயினை இமை போல் ஜோஷ்வா காப்பாற்றுகிறார் என்பது கதை. இப்படத்தின் மூலமாக, இனிமேல் என்னால் முழுநீள ஆக்‌ஷன் படத்தை மிகச்சிறப்பாக இயக்க முடியும் என்று தெரிந்துகொண்டேன்.

The post என்னால் முழுநீள ஆக்‌ஷன் படம் இயக்க முடியும்: கவுதம் வாசுதேவ் மேனன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Gautham Vasudev Menon ,Chennai ,K.Aisari Ganesh ,Wales Film International ,Varun ,Rahe ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...