×

ராணுவ வீரர்களாக இரட்டை வேடத்தில் விக்னேஷ்

 

சென்னை: ளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் பான் இந்தியா படம், ‘ரெட் ஃப்ளவர்’. இதில் முதல்முறையாக விக்னேஷ் இரட்டை வேடங் களில் நடிக்கிறார். மற்றும் மனிஷா ஜஷ்னானி, நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், தலைவாசல் விஜய், அஜய் ரத்னம், மோகன் ராம், லீலா சாம்சன், கோபி கண்ணதாசன், ரஷ்ய நடிகர்கள் ஆண்ட்ரே இலபிச்சேவ், மெஹ்தி ஷா நடிக்கின்றனர். கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் ராம் இசையில் மணி அமுதவன் பாடல் கள் எழுதுகிறார். ஷூ வல் எபெக்ட்ஸ் நிபுணர் ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்குகிறார். அவர் கூறியதாவது:

‘ரெட் ஃப்ளவர் மிஷன் ஃபாரெவர்’ என்பது முழு பெயர். ராணுவத்தில் சேர விரும்பும் இரட்டை சகோ ரர்கள் விக்கி, மைக்கேல் கேரக்டர்களில் விக்னேஷ் நடிக்கிறார். 3ம் உலகப் போருக்கு பின் ஐரோப்பிய யூனியன் வல்லரசாகிறது. பிறகு உலக நாடுகள் மீது அதிக வரிகள் விதிக்கிறது. படையெடுப்பு அச்சுறுத் தல் விடுத்து, பதட்டமான சூழலை உருவாக்குகிறது. இதை எதிர்கொள்வதற்கு துணிச்சலான ரகசிய நடவடிக்கையை இந்திய அரசு திட்டமிட, இரட்டை சகோதரர்கள் தடைகளை முறியடித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை காப்பாற்ற எப்படி உதவுகின்றனர் என்பது கதை. கற்பனை சம்பவங்கள் கலந்து படம் உருவாக்கப்படுகிறது.

The post ராணுவ வீரர்களாக இரட்டை வேடத்தில் விக்னேஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vignesh ,Chennai ,Pan ,India ,K. Manickam ,Likampal Pictures ,Manisha Jashnani ,Nasser ,YG Mahendran ,Suresh Menon ,Thalivasal Vijay ,Ajay Ratnam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல்...