×

தேவரா முதல் பாகம் அக்.10ம் தேதி ரிலீஸ்

 

ஐதராபாத்: எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடித்திருந்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியானதை தொடர்ந்து, ஜூனியர் என்டிஆரின் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நடிக்கும் ‘தேவரா’ என்ற பான் இந்தியா படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இது 2 பாகங்களாக உருவாகிறது. இப்படத்தின் மூலமாக போனி கபூர், தேவி தம்பதியின் மூத்த மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தென்னிந்திய மொழியில் அறிமுகம் ஆகிறார். முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில், ‘தேவரா’ முதல் பாகம், வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவது உறுதி என்று படக்குழு அறிவித்துள்ளது.

The post தேவரா முதல் பாகம் அக்.10ம் தேதி ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Devara ,Hyderabad ,SS Rajamouli ,Junior NTR ,Pan ,Koratala Siva ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வித்தக விநாயகி விக்னேஸ்வரி வழிபாடு!