×

கேரளாவில் இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு

கேரளா: கேரள மாநிலம் செத்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக்  இவரது மனைவி பாத்திமா ஹானான்  இவர் திருமணத்திற்கு பிறகும் தனியார் கல்லூரி ஒன்றில் தனது படிப்பை தொடர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் ஹானான் இறைச்சி உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது தொண்டையில் இறைச்சி துண்டு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டுள்ளார். பிறகு அவரை உடனே அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு தொடர் சிகிச்சையிலிருந்த ஹானான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாப்பிடும்போது இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கியதால் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post கேரளாவில் இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Ashiq ,Chethalur ,Fatima Hanan ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்