×

6 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: 13 வயது மாணவன் கைது

குன்றத்தூர்: போரூரில் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 13 வயது பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர். போரூரை சேர்ந்த ஒரு தம்பதியின் 6 வயது சிறுமி நேற்று தனது வீட்டின் முன்பு தனியே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அந்த சிறுமியின் வீடு அருகே வசிக்கும் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவன், அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். இதில் அந்த சிறுமி அலறியபடி வீடு திரும்பி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் அழுதபடி கூறியிருக்கிறாள். இப்புகாரின்பேரில் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அந்த பள்ளி மாணவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளி மாணவன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, போக்சோ பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி மாணவனை கைது செய்தனர். பின்னர் அவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்….

The post 6 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: 13 வயது மாணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Kundarthur ,Borur ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் 3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை தற்கொலை