×

தமிழில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா அனில்

சென்னை: ராஜு சந்திரா எழுதி இயக்கியிருக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க, மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளை பெற்ற ‘ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்’, ‘ஐ ஆம் எ ஃபாதர்’ என இரண்டு மலையாள படங்களை இயக்கிய ராஜு சந்திரா, தனது மூன்றாவது படமாக தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார்.

The post தமிழில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா அனில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aishwarya Anil ,CHENNAI ,Raju Chandra ,Appukutty ,Plan Three Studios Pvt Ltd ,Roji Mathew ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...