×

3டி படத்துக்கு இசையமைக்கும் திபு நினன் தாமஸ்

சென்னை: ‘மரகத நாணயம்’ படத்தின் ‘நீ கவிதைகளா’ பாடல் முதல், ’சித்தா’ படத்தின் சமீபத்திய சூப்பர்ஹிட் பாடலான ‘கண்கள் ஏதோ’ வரை பல படங்களில் பணியாற்றியவர் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். ‘கனா’ படத்தின் ஆல்பம் இவரை ஒரே இரவில் இன்னும் பிரபலமாக்கியது. இந்தப் படத்தின் மொத்த ஆல்பமும் ‘வாயாடி பெத்த புள்ள’ மற்றும் ‘ஒத்தையடி பாதையில்’ பாடல்கள் மூலம் 800 மில்லியன், 450 மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது.

அதேபோல, ‘பேச்சுலர்’ படத்திலிருந்து இவரது ‘அடியே’ பாடலும் பிரபலமானது. ஸ்பாட்டிஃபை தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை எட்டிய முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையை இந்தப் பாடல் வைத்துள்ளது. ஸ்பாட்டிஃபை தளத்தில் இவ்வளவு அதிக பார்வையாளர்களை அடைந்த முதல் தென்னிந்திய இசையமைப்பாளர் இவர்தான்.

இப்போது மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர். எக்ஸ்’ படம், ஜிதின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் ஐந்து மொழிகளில் 3டியில் வெளியாகும் பான்-இந்தியப் படமான’ அஜயந்தே ரெண்டம் மோஷனம்’ மற்றும் இன்னும் நான்கு தமிழ்ப் படங்களுக்கு இசையமைப்பதாக திபு நினன் தாமஸ் தெரிவித்தார்.

The post 3டி படத்துக்கு இசையமைக்கும் திபு நினன் தாமஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dibu Ninan Thomas ,CHENNAI ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தமிழ் படங்கள் பாணியில் ஹாலிவுட் படம் ரீ-ரிலீஸ்