×

சென்னை சத்யம் திரையரங்கில் பார்வையாளர்களை வரவேற்கும் பிரம்மாண்ட ஹெலிகாப்டர்!

மார்வெல் குழுவின் அடுத்தப் படைப்பான ‘மேடம் வெப்’ திரைப்படம் சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட ஒரு த்ரில்லர் படமாக வெளியாகவிருக்கிறது. பிப்ரவரி 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இந்தப் படம் தமிழிலும் வெளியாக உள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் டகோடா ஜான்சன், சிட்னி ஸ்வீனி, செலஸ்டி ஓ’கானர், இசபெலா மெர்சிட் மற்றும் தஹர் ரஹீம் உட்பட பல நடித்துள்ளனர். ஒரு கொடிய எதிரியால் வேட்டையாடப்படும் ஒரு பெண்ணுக்கு திடீரென எதிர்காலத்தை பார்க்கும் அபூர்வ சக்தி கிடைக்கிறது.

இதிலிருந்து அவர் தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளிலும் உலகம் முழுவதும் ஆங்கில மொழிகளிலும் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக சிவப்பு நிற ஹெலிகாப்டர் சத்யம் சினிமாஸ் திரையரங்கம் முன்பு பிரம்மாண்டமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post சென்னை சத்யம் திரையரங்கில் பார்வையாளர்களை வரவேற்கும் பிரம்மாண்ட ஹெலிகாப்டர்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai Satyam Theatre ,Marvel ,Columbia Pictures ,Chennai Satyam Theater ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 26ம் தேதி வெளியாகும் டெட்பூல் அன்ட் வோல்வரின்