×

அமெரிக்காவில் விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இயக்குனர் ஆனார்

சென்னை: ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ள படம் ‘சத்தமின்றி முத்தம் தா.’ லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பத்துக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்ற ராஜ் தேவ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘இது காதலும் சஸ்பென்ஸும் கலந்த திரில்லர் திரைப்படம். எதிர்பாராத திருப்புமுனைகளுடன் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக புனையப்பட்டது. ஸ்ரீகாந்த் இதுவரை ஏற்றிராத புது விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரும் ஹீரோயின் பிரியங்கா திம்மேஷ் இருவரும் நடிக்கும் காட்சிகளில் பார்வையாளர்கள் முழுவதுமாக ஈர்க்கப்படுவார்கள். நடிகர் ஹரிஷ் பெராடி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படத்தின் தலைப்புதான் இப்படி. ஆனால், படத்தில் முத்தக்காட்சி எதுவும் இல்லை’ என்றார்.

‘திரௌபதி’, ‘ருத்ரதாண்டவம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜுபின் இசையமைக்கிறார். விவேகா பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் எழுதிய சிறுகதைகள் பல்வேறு தமிழ் இதழ்களில் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதை போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ‘KISS DEATH மற்றும் A STRANGER IS WALKING BY’ என்ற இரண்டு கதைகள் இவர் எழுதியவை. அந்த கதைகள் அமெரிக்காவில் உள்ள இதழ்களில் அச்சிடப்பட்டு வெளியானதோடு இணையத்தின் கிண்டில் பதிப்பாகவும் வெளியாகியுள்ளது. தயாரிப்பு செலிபிரைட் புரொடக்ஷன்ஸ், கார்த்திகேயன்.எஸ். தயாரிப்பு மேற்பார்வை ஏஜெபி. ஆனந்த். ஒளிப்பதிவு யுவராஜ்.எம். படத்தொகுப்பு மதன்.ஜி. நடனம்: தினேஷ். சண்டைப் பயிற்சி ‘மிராக்கிள்’ மைக்கேல்.

The post அமெரிக்காவில் விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இயக்குனர் ஆனார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : America ,Chennai ,Srikanth ,Priyanka Thimmesh ,Raj Dev ,Los Angeles World Film Festival ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி...