×

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் துளசாபுரம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி மூலம் துவக்கி  வைத்தார். இதில், கலெக்டர் ஆர்த்தி, அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி செல்வம், பெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது.தமிழக முதல்வர் இன்று கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். முதன்முதலில் இத்திட்டம்  கலைஞரால் கொண்டு வரப்பட்டது. தரிசு நிலங்களை மேம்படுத்தி விவசாயிகளுடைய வாழ்வை வளம்படுத்த வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 272 ஊராட்சிகளில் ஆண்டுதோறும் 37 ஊராட்சிகளை தேர்வு செய்து, அடுத்த 5 ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவது, நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்ப் செட்கள் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் இத்திட்டம் மூலமாக செயல்படுத்தப்படும்.நாடு முழுவதும் விவசாயிகளின் நிலம் புறம்போக்கு இடத்தில் இருந்த நிலையை மாற்றி, விவசாயிகளுக்கு பட்டா வழங்கி, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர்  கலைஞர். அதே எண்ணத்தின் அடிப்படையில், தற்போது முதல்வர்  இத்திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் என்றார்.மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில் வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் தலைமை தாங்கினார். துணை தலைவர் கவுதமி அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சாமிநாதன் வரவேற்றார். அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், தோட்டக்கலை துறை அலுவலர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், வெள்ளபுத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வரதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மதுராந்தகம் ஒன்றியம் அண்டவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர வரதன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் முருகன் வரவேற்றார். இதில், ஒன்றிய குழு உறுப்பினர் மதி கிருஷ்ணன் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.சிலாவட்டம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி பாலு தலைமை தாங்கினார். துணை தலைவர் நிர்மலா ராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 399 பேருக்கு ₹57.91 லட்சத்தில் தென்னங்கன்று, வரப்பில் பயிரிட உளுந்து, கை தெளிப்பான், விசைத் தெளிப்பான், பேட்டரி தெளிப்பான், காய்கறி விதை, பழச்செடி, பவர் டில்லர், படகு இன்ஜின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.நிகழ்ச்சியில் கலெக்டர் ராகுல்நாத், எம்பி செல்வம், திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, ஒன்றிய குழு துணை தலைவர் எஸ்.ஏ.பச்சையப்பன், மணமை ஊராட்சி தலைவர் செங்கேணி, துணை தலைவர் பூர்ணிமா சண்முகம், முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் து.யுவராஜ், ஒன்றிய கவுன்சிலர் எஸ்வந்த்ராவ், திமுக நிர்வாகிகள் ஞானபிரகாசம், கரியச்சேரி சேகர், ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி, கட்டவாக்கம், ஏனாத்தூர், இலுப்பைபட்டு, அத்திவாக்கம் உள்பட 9 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா நடந்தது.செய்யூர்: சித்தாமூர் ஒன்றியம் சித்தாற்காடு ஊராட்சி பாளையூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற சிற்றரசு, நலத்திட்டங்களை வழங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சாந்தி ரவிகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் பிரேமா சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் மு.சரஸ்வதி, துணை தலைவர் க.செல்லம்மாள், வேளாண் துறை ராஜாராம், மகேந்திரன், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பெருநகர் கிராமத்தில் உத்திரமேரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். துணைப் பெருந்தலைவர் வசந்திகுமார், மாவட்ட குழு உறுப்பினர் பத்மாபாபு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ருத்திரக்கோட்டி, சுகுணா, பேரூராட்சி தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் மங்களகவுரி வடிவேலு வரவேற்றார்.காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்….

The post அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : All Village Integrated Agricultural Development Program Inauguration Ceremony ,Minister ,Th.Mo.Anparasan ,Sriperumbudur ,Sriperumbudur Union ,Tulasapuram ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி