×

சசிகுமார் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனுராக் காஷ்யப்

சென்னை: விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில், உருவாகி வரும் படம் ‘ஃபிரீடம் ஆகஸ்ட் 14’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இணைந்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

வித்தியாசமான களத்தில் நடைபெறும் ஒரு கதையின் பிரதிபலிப்பாக இப்படம் இருக்கும் என்கிறது படக்குழு. கடலுக்கு நடுவே படகில் மக்கள் நிற்க, வெடித்து சிதறும் நெருப்புக்கிடையில், புது தோற்றத்தில் இருக்கும் சசிகுமாரின் லுக் இதில் இடம்பெற்றுள்ளது. இன்னொரு போஸ்டரில் சசிகுமார், லிஜோமோல் தோற்றம் இடம்பெற்றுள்ளது. இது வைரலாகியுள்ளது. ‘கழுகு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா, 90களில் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, திரில்லர் டிராமாவாக படத்தினை உருவாக்கி வருகிறார்.

இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரமாண்டமான செட் அமைத்து, படத்தின் காட்சிகளை படக்குழு படமாக்கியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் படங்களில் நடித்துள்ள சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ்கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

The post சசிகுமார் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனுராக் காஷ்யப் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anurag Kashyap ,Sasikumar ,Chennai ,Vijaya Ganapathy Pictures ,Satyasiva ,Lijo Mol Jose ,Pandyan Parasuraman ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...