×

ஜோடியாக நடிக்க கேட்டதால் ‘பிளாக்’ செய்த நடிகைகள்: புகழ் வேதனை

சென்னை: ஜெ.சுரேஷ் இயக்கத்தில், காமெடி நடிகர் புகழ் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘மிஸ்டர் ஜு கீப்பர்’. இதில் கிராபிக்ஸ் பயன்படுத்தாமல், நிஜ புலி நடிக்க வைக்கப்பட்டுள்ளது. ஜெ4 ஸ்டுடியோஸ் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோவை சூரி வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘அரிய வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதிகள் அழியாமல் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இம்மாதம் வெளியாகும் இப்படம் வெற்றிபெற வாழ்த்துகள். மிருகங்கள் சரியான இடத்தில்தான் இருக்கின்றன. நாம்தான் மிருகங்கள் வசிக்கும் இடங்களை அபகரிக்கிறோம். மிருகங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்’ என்றார்.

புகழ் பேசும்போது, ‘நடிக்க வருவதற்கு முன்பு, இதே பிரசாத் லேப் ஸ்டுடியோவுக்கு எதிரில் கூலிக்கு கார் கழுவினேன். வாசலில் நிற்கும் லாரிகளுக்கு கிரீஸ் நிரப்பினேன். இன்று படிப்படியாக வளர்ந்து, அதே பிரசாத் லேப்பில் நடக்கும் விழாவில், ஹீரோவாக வந்துள்ளேன். என்மீது அதிக நம்பிக்கை வைத்து, பல கோடி செலவு செய்து படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சூரி எனக்கு அண்ணன் மாதிரி. என்னை அவரது குடும்பத்தில் ஒருவராகப் பார்ப்பதை நினைத்து அதிக மகிழ்ச்சி. எனக்கு ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா நடித்துள்ளார். நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சில நடிகைகளிடம் சொல்லிவிட்டு, எனது ஜோடியாக நடிக்க முடியுமா என்று கேட்டபோது, எந்த பதிலும் சொல்லாமல், என்னை தங்களது மொபைலில் ‘பிளாக்’ செய்துவிட்டனர். ஷிரின் கான்ச்வாலா மட்டுமே துணிச்சலுடன் நடித்தார்’ என்றார்.

The post ஜோடியாக நடிக்க கேட்டதால் ‘பிளாக்’ செய்த நடிகைகள்: புகழ் வேதனை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : J. Suresh ,J4 Studios ,Yuvan Shankar Raja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா