×

4 இயக்குனர்கள் தொடங்கி வைத்த படம்

சென்னை: மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ படத்தை கோலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குனர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர். இயக்குனர்கள் சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் ஆகியோர் சனா ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பைத் தொடங்கி வைத்துள்ளனர். பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஸ்ரீகாந்த் நடித்த ‘எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. முத்து, சந்தோஷ் சிவன், ரவி இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சார்லி, கும்கி அஸ்வின், சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த அபிஷேக் ஏஆர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கு முன்பு அவரது இசையில் உருவான படம் ‘கேம் ஆன்’. ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். ‘சிவகுமாரின் சபதம்’ மற்றும் ‘ரவுடி பேபி’ படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக் இதில் எடிட்டராக பணிபுரிகிறார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் குறுகிய கால படைப்பாக உருவாகிறது.

The post 4 இயக்குனர்கள் தொடங்கி வைத்த படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Collywood ,Master Mahendran ,Seeman ,Saran ,Arunraja Kamaraj ,Kalyan ,Sana Studios ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...