×

ரஜினி படத்தின் இசையமைப்பாளர் மரணம்

சென்னை: ‘நான் அடிமை இல்லை’ பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 71.1984ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளியான ‘நாணயம் இல்லாத நாணயம்’, ரஜினி நடிப்பில் 1986ல் வெளியான ‘நான் அடிமை இல்லை’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆனந்த். குறிப்பாக ‘நான் அடிமை இல்லை’ படத்தில் ‘ஒரு ஜீவன் தான், உன் பாடல் தான்…’ என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் ‘ஊருக்கு உபதேசம்’, ‘ராசாத்தி வரும் நாள்’ உள்பட 10 தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர்.இந்த நிலையில் விஜய் ஆனந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். இதையொட்டி திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விஜய் ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

The post ரஜினி படத்தின் இசையமைப்பாளர் மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajinikanth ,CHENNAI ,Vijay Anand ,Vishu ,Rajini ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘கல்கி’ படம் இந்திய சினிமாவை அடுத்த...