×

திகில் சஸ்பென்ஸ் கதை ஒரு நொடி

சென்னை: அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனருமான தனஞ்செயன் இப்படத்தை வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ்.‘ஒரு நொடி’ படத்தில் ‘தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் நாயகனாக நடிக்க, அவருடன் எம்எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி, குரு சூரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர்.

ஒளிப்பதிவு இயக்குனராக கே.ஜி ரத்தீஷ் பொறுப்பேற்க, கலை இயக்குனர் பணியை கவனிக்கிறார் எஸ்ஜே ராம். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கமும் படத்தொகுப்பாளர் எஸ் குரு சூர்யாவும் படத்தில் பணியாற்றியுள்ளனர்.‘ஒரு நொடி’ படத்தின் மூலம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை புதிய கோணத்தில் சொல்லக் காத்திருக்கிறேன். ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம் என்றார் இயக்குனர் மணிவர்மன்.

The post திகில் சஸ்பென்ஸ் கதை ஒரு நொடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,GV Prakash ,Kumar ,Taman Kumar ,Manivarman ,BAFTA Film College ,Thananjeyan ,Madurai… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தீபாவளிக்கு அமரன் ரிலீஸ்