×

கமல்ஹாசன் தயாரிப்பில்: சிம்பு பட பர்ஸ்ட் லுக் வெளியானது

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. சிம்புவுக்கு இன்று பிறந்த நாள். சமீபத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் அப்பா ஆனார். இந்நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே சமயத்தில் பிறந்த நாள் விழா, பெரியப்பா ஆனது, கமல் படம் என மூன்றுவிதமான மகிழ்ச்சி தருணத்தில் இருக்கிறார் சிம்பு. இதையொட்டி கமல் தயாரிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் இரண்டு வித தோற்றங்களில் சிம்பு காணப்படுகிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘எஸ்டிஆர் (சிம்பு) 48’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை கமல்ஹாசன் உருவாக்கி வருகிறார். அதேபோல், ரெட்ஜெயன்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீசுடன் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தையும் தயாரிக்கிறார். மூன்றாவதாக இந்த படத்தையும் அவர் தயாரிக்கிறார். ஒரே சமயத்தில் 3 படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன், விரைவில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்தையும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘எஸ்டிஆர் 48’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, சிம்புவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படத்தை சரித்திர கால படமாக தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.

 

The post கமல்ஹாசன் தயாரிப்பில்: சிம்பு பட பர்ஸ்ட் லுக் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamalhassan ,Chennai ,Simbu ,Kralarasan ,Kamal Hassan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்