×

கவின் ஜோடியாகும் அதிதி போஹன்கர்

சென்னை: ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘லிஃப்ட்’ படங்களில் கவின் நடித்தார். இவர் நடித்து வெளியான ‘டாடா’ வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது, ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். பி.வி.எஸ்.என்.பிரசாத், நிதி சாகர் தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி போஹன்கர் நடிப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அவர் ‘ஜிமிக்கி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

 

The post கவின் ஜோடியாகும் அதிதி போஹன்கர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Gavin ,Aditi Bohankar ,CHENNAI ,Ilan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருமணத்துக்கு பிறகு அபர்ணா தாஸ் நடிப்புக்கு முழுக்கா?