×

அதிதி ராவ் ஹைதாரி, ஷான் ரோல்டனின் இசை கூட்டனியில் ‘ப்ளீஸ் புரிஞ்சுக்கோ’

சென்னை: ‘காகரட்டான்’ படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்ப்பு மற்றும், “இது செம்ம வைப்” எனும் வசீகரமான இசை இயக்கத்தை ஒட்டி, கோக் ச்டுடியோ தமிழ் சீசன் 2 மீன்டும் ஒரு முறை சமீபத்திய பாடலான ப்ளீஸ் புரிஞ்சுக்கோ என்ற பாடலின் ஆற்றல் மிக்க இசையால் பார்வையாளர்களை கவர உள்ளது. . இந்த பாடலில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியருமான ஷான் ரோல்டனுடன் இணைந்து பன்முக நடிகை அதிதி ராவ் ஹைதாரி இடம்பெறுவார். ஷான் ரோல்டன் இந்த பாட்டை இசையமைத்தது மட்டுமின்றி சுய குரலில் இந்த பாடலை பாடியும் இருப்பதால் இந்தப் பாடல் ஒரு இசை விருந்தினை போல் ணேயர்கல் இடையே பறபறப்பை ஏர்ப்படுத்தியுல்லது. இதனுடன் இன்னும் சற்று ஆர்வத்தை தூண்டுமாரு அதிதி ராவ் ஹைதாரி இருப்பது இந்த பாடலுக்கு ஒரு புதிய புத்துணர்ச்சியும் நலிணத்தையும் அளிக்கிறது என்பது குறிப்பிடதக்கது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ எனும் இந்த பாடல், ஒரு கலைஞராக அதிதியின் பன்முகத் திறனை வெளிப்படுத்துகிறது அதே போல், கோக் ஸ்டுடியோவுடனான அவரது பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தறுணமாகும். ஆகையால் இந்த கூட்டணி பார்வையாலர்கலிடையே ஒரு தனித்துவமான முன்னோக்கைக் கொண்டுவருகிறது.

தோழமையின் அனுபவங்களை அதன் உண்மையான வடிவில் உள்ளடக்கி, காதலர்கள் எவ்வாறு உண்மையாக இணைகிறார்கள் என்பதற்கான கதையை இந்தப்பாடல் இசைக் கதையாக மிக அழகாகப் படம்பிடித்திருக்கிறது. நவீன காதல் கதைகளை கதையாய் வடிவமைக்கும் பிற முன்னுரிமைகளுக்கு மத்தியில், காதலின் உண்மையான அனுபவங்களை அடையாளப்படுத்தும் இன்றைய அதிவேக உலகில் உறவுகளின் பன்முகத்தன்மை கொண்ட இயல்பை உணர்வுபூர்வமாக இந்த பாடல் எளிமையாக எடுத்துகாட்டுகிறது. தமிழ்த் திரையுலகில் தணது பங்களிப்புகளுக்காக கொன்டாடப்படும் ஷாண் றோல்டன், கர்நாடக இசை, சுயாதீன இசை மற்றும் திரைப்பட இசை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றதற்காக போற்றப்ப்டுபவர். இப்பொழுது அணைவரையும் கவரும்படி ஒரு தடத்தை உருவாக்க அவரது தனித்துவமான இசை நுண்ணறிவைக் கொண்டு வருகிறார். இந்த பாடலுக்கு இன்னும் சற்று செழிப்பு கொன்டு சேர்ப்பது நமது அதிதி ராவ் ஹைதாரி. காரணம், பல மொழிகள் மற்றும் ஜாணர்களில் பணீயாற்றி, இந்தியத் திரையுலகில் தனது சிறந்த பணிக்காக அறியப்பட்ட நடிகையான இவரின் ஆத்மார்த்தமான குரல். இந்த ஷான் ரோல்டனுடன் அதிதியின் இசை இணைப்பு, பாடலின் சந்தோஷம், உணர்ச்சி ஆழம் மற்றும் நம்பகத்தன்மையை உயர்த்துகிறது.

ஷான் ரோல்டன் தனது உற்சாகத்தைப் பகிர்ந்துகொள்கிறார், “ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ஒரு உறவின் இரண்டு பகுதிகளை ஆராயும் உரையாடலை உருவாக்கும் முயற்சி. பாடல் பார்வையாளர்களுடன் இணையும், மேலும் அவர்கள் எங்கிருந்தாலும், எந்த மனநிலையிலும் அதைக் கேட்க முடியும். அதே நேரத்தில், இந்த பாடல் காதலின் வலி, காதலின் உற்ச்சாகம், பிரிவின் வேதணை, காதல், றோமான்ஸ், மற்றொரு நபருடன் இருப்பது போன்றவைகலை சித்தரிக்கும் ஒரு முயர்ச்சியுமாகும். இது நாம் வாழும் டிஜிட்டல் யுகத்தில் சம்பந்தங்கலின் ஆலத்தை மிகவும் சுவாரஸ்யமான முறையில் எடுத்துக்காட்டும் பாடலாகும்.” மேலும் அதிதி ராவ் ஹைதாரி கூறுகையில் “இது கோக் ஸ்டுடியோவுடன் எனது முதல் கூட்டுப்பணியாகும், மேலும் கோக் ஸ்டுடியோ தமிழுடன் இனைந்து எனது இந்த பயனத்தை துவங்கியது எனக்கு மேலும் சந்தோஷத்தை அளிக்கிறது. தமிழ் பார்வையாளர்கள் எப்போதுமே மிகவும் அன்பாக உள்ளனர், மேலும் அவர்களின் பதிலைப் பார்க்கவும் கேட்கவும் ஆவலாக உள்ளேன்.

ஷான் ரோல்டனுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது – அவரது இசை அறிவு அபாரமானது, இந்த பாடலை நாங்கள் சிரமமின்றி பதிவு செய்ததை எண்ணி வியக்கிறேன். விக்னேஷ் சிவனின் பாடல் வரிகள் தென்றலில் மெல்லிசை போல் உள்ளது. ஒட்டுமொத்தமாக, இது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. மேலும், பாடலை உருவாக்கும் செயல்முறையை நாங்கள் ரசித்த அளவிர்க்கு பார்வையாளர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.!” குரூப் M இந்தியா இன்வெஸ்ட்மென்ட்ஸ், டிரேடிங் & பார்ட்னர்ஷிப்ஸ் தலைவரான அஷ்வின் பத்மநாபன் கூறுகையில் – “ப்லீஸ் புரிஞிக்கொ, ஷான் ரோல்டன் மற்றும் அதிதி ராவ் ஹைதாரியின் தூண்டுதலான குரல்களுக்கு உயிரளிப்பது போல் உள்ளது. நவீன காதல் மற்றும் பேராசையின் காலங்களில் அன்பைக் கண்டறிவதற்கான சோதனைகளை அழகாக படம்பிடித்துள்ளார்.!” இந்த யுகத்தின் சலசலப்புகளுக்கு மத்தியில் தம்பதிகள் சமநிலையைக் காண முயற்சிக்கும் சமகால காதலின் சாரத்தை இந்தப் பாடல் அழகாகப் படம்பிடித்திறுக்கிறது. அதிதி ராவ் ஹைதாரி மற்றும் ஷான் ரோல்டனின் இணைந்து வளிகொன்டு வந்த “ப்லீஸ் புரிஞ்சுக்கோ”, கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 நிறுவிய இசைப் புத்திசாலித்தனத்தை நிலைநிறுத்துவதாகத் தோன்றுகிறது.

இந்த சீசன் வ்ளர்ந்து வரும்போது, ​​ புதைந்து கிடக்கும் அண்பின் ஆளத்தை அழகாகப் எடுத்துக்காட்டும் ஒரு மெல்லிசைப் பயணத்தில் மூழ்கிவிட நேயர்கள் ஆர்வ்மாக எதிர்பார்க்கலாம். நமது கலாசார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கும், தமிழ் இசையின் செழுமையைக் கொண்டாடுவதற்கும் கோகோ கோலாவின் அர்ப்பணிப்பாக, கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 மேலும் நிம்ர்ந்து நிர்க்கிறது. இந்த தனித்துவமான கலைஞர்களால் இயற்றப்பட்ட இசையின் தலைசிறந்த படைப்புகளை அனுபவிக்க கோக் ஸ்டுடியோ தமிழ் உங்களை அண்போடு வரவேர்க்கிறது. இசை, கலாச்சாரம் மற்றும் எழுச்சியூட்டும் ஒலிகளின் மந்திரத்தை உணர, உங்களை யுனிவர்சல் மியூசிக் ஆர்வத்துடன் அழைக்கிறது. அனைத்து டிராக்குகளும் ஆடியோ OTT இயங்குதளங்களில் கிடைக்கும் – Spotify, Gaana, Saavn, Wynk Music மற்றும் Audible. கோக் ஸ்டுடியோ தமிழின் அனுபவம், வரும் வாரங்களில் மாநிலத்தில் தொடர்ந்து வளர்ந்து வரும். இசைக் கலாச்சாரத்தில் இளைஞர்கள் பங்கேற்க, மைதானத்தில் சின்னஞ்சிறு சான்றிதழ்கள் மற்றும் அனுபவங்கள் பெற யேற்ப்பாடுகல் செய்வதொடு, தேவைப்படும்போது நேரில் அனுபவிக்கக்கவும் வாய்ப்புகள் அளிக்க படும்.

The post அதிதி ராவ் ஹைதாரி, ஷான் ரோல்டனின் இசை கூட்டனியில் ‘ப்ளீஸ் புரிஞ்சுக்கோ’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aditi Rao Hydari ,Shaun Roldan ,CHENNAI ,Coke Studio ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அதிதியுடன் திருமணம் எப்போது? சித்தார்த் பதில்