சென்னை: ‘சாக்லெட் பாய்’ என்று அழைக்கப்பட்ட ஸ்ரீகாந்த் ஒரு காலத்தில் காதல் படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு ‘போஸ்’ படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ ஆனார். ‘நண்பன்’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் பிசியாகி இருக்கிறார் ஸ்ரீகாந்த். கடந்த ஆண்டு தமிழில் பஹீரா, கண்ணை நம்பாதே, எக்கோ படங்களிலும் பிண்டம், ராவணசுரா என்ற தெலுங்கு படங்களிலும், ‘அமலா’ என்ற மலையாள படத்திலும் நடித்தார். இந்த ஆண்டு 3 படங்களில் நடித்து வருகிறார். அதனுடன் தற்போது புதிதாக ‘ஆபரேஷன் லைலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘மின்மினி’ படத்தை தயாரித்த பொன்னையன் செல்வம் தயாரிக்கிறார். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். சித்திக்கா சர்மா ஹீரோயின். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, வின்சன்ட் அசோகன். டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், வனிதா விஜயகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் நடந்துள்ளது. அடுத்த மாதம் தியேட்டர்களில் வெளியாகிறது.
The post ஆபரேஷன் லைலாவில் ஸ்ரீகாந்த் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.