×

காளிதாஸ், அர்ஜுன் தாஸ் இணையும் போர்

சென்னை: இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள ‘‘போர்”, படத்தின் வித்தியாசமான பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிஜோய் நம்பியார் கூறுகையில், ‘வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து பார்வையாளர்களை ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும், வித்தியாசமான சவாலை தருகிறது இந்த பர்ஸ்ட் லுக்’ என்றார். பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர், ‘போர்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

 

The post காளிதாஸ், அர்ஜுன் தாஸ் இணையும் போர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arjun Das ,Chennai ,Bijoy Nambiyar ,Kalidas ,Harshvardhan Rane ,Ehan Bhatt ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...