×

திருவாரூர் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இரு குழந்தைகளுடன், தாய் தற்கொலை முயற்சி

திருவாரூர்:திருவாரூர் அருகே பெண் ஒருவர், இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்த கம்மங்கொல்லையில் வசிப்பவர் ஜெயசீலன்-நந்தினிதேவி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், நந்தினிதேவி விஷம் சாப்பிட்டுள்ளார். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு தாயே உணவில் விஷம் கலந்து கொடுத்த கொடூரம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. …

The post திருவாரூர் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இரு குழந்தைகளுடன், தாய் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Koradacherry ,
× RELATED நில அபகரிப்பு வழக்கு: அதிமுகவை சேர்ந்த...