×

சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு ஹாலிவுட் நடிகைக்கு 8 ஆண்டு சிறை: கணவருக்கும் தண்டனை

ஹாலிவுட்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஹாலிவுட் நடிகை ஸாராவுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்ட நிலையில், அவரது கணவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள் என பலரும் பாலியல் ரீதியான தொல்லை வழக்குகளில் சிக்குவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஸாரா, 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டிங்காமில் உள்ள கிரவுன் நீதிமன்றத்தில் நடிகை ஸாரா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை செய்ய உடந்தையாக இருந்தது மற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக நடிகை ஸாரா மற்றும் கணவர் ஆகிய இருவரும் குற்றவாளிகள். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகை ஸாராவிற்கு 8 ஆண்டுகளும், அவருடைய கணவர் விக்டர் மார்க்கிற்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இது ஹாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு ஹாலிவுட் நடிகைக்கு 8 ஆண்டு சிறை: கணவருக்கும் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Hollywood ,Sara ,
× RELATED அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த...