×

அரிமாபட்டி சக்திவேல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

 

சென்னை: லைப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன்.கே, அஜிஸ்.பி இணைந்து தயாரிக்கும் படம், ‘அரிமாபட்டி சக்திவேல்’. ரமேஷ் கந்தசாமி இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கே.எஸ்.ரவிகுமார், கரு.பழனியப்பன், கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டனர். முக்கிய வேடத்தில் சார்லி, ஹீரோவாக பவன்.கே, ஹீரோயினாக மேக்னா ஹெலன் நடிக்கின்றனர். தவிர இமான் அண்ணாச்சி, சூப்பர் குட் சுப்பிரமணி, கராத்தே வெங்கடேஷ், ஹலோ கந்தசாமி, பிர்லா போஸ், அழகு, செந்தி குமாரி நடிக்கின்றனர். ஜே.பி.மேன் ஒளிப்பதிவு செய்ய, ‘களவாணி 2’ மணி அமுதவன் பாடல்கள் எழுதி இசை அமைக்கிறார். பவன்.கே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

படம் குறித்து ரமேஷ் கந்தசாமி கூறுகையில், ‘நான் கரு.பழனியப்பனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவன். ‘அரிமாபட்டி சக்திவேல்’ படம், திருச்சி அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திலுள்ள மக்கள் தங்களுக்கென்று ஒரு சுயக்கட்டுப்பாட்டை வரையறுத்து வாழ்ந்து கொண்டிருக்க, அந்த ஊரிலுள்ள ஒருவன் அந்தக் கட்டுப்பாட்டை மீறும்போது ஹீரோவுக்கும், ஊருக்கும் இடையே நடக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை மையக் கருவாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. சமூகத்தின் மறுபக்கத்தையும், ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த மனிதர்களின் முகத்தையும் தோலுரித்துக் காட்டும் படைப்பான இதன் படப்பிடிப்பு அரியலூர் மற்றும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது’ என்றார்.

The post அரிமாபட்டி சக்திவேல் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Pawan K ,Ajis P ,Life Cycle Creations ,Ramesh Kandasamy ,KS Ravikumar ,Karu Palaniappan ,Kalaipuli S Thanu ,Charlie ,Pawan.K ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...