×

சிறுவர்களுக்கு கல்வி உதவி செய்யும் கிளாஸ்மேட்ஸ் படக்குழு: மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில்

 

சென்னை : கிளாஸ்மேட்ஸ் (Glassmates) படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான அங்கையர் கண்ணன் அளித்த பேட்டி: மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம். குடியால் ஒருவனின் வாழ்க்கை என்ன ஆகிறது, அவனை சுற்றியுள்ளவர்கள் எப்படி பாதிக்கிறார்கள், அவன் என்னென்ன விபரீதங்களை எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. இதில் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தையும் தயாரித்துள்ளேன். இந்த படத்தில் ரசிகர்களுக்கு எந்த மெசேஜும் சொல்லவில்லை. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருக்கிறோம். மயில்சாமி சார் நடித்த கடைசி படம் இதுதான். இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தியும் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹீரோயினாக பிரணா நடித்துள்ளார். டிஎம். கார்த்திக், சாம்ஸ், அபி நக்‌ஷத்திரா, முத்துப்பாண்டி, அருள்தாஸ் நடித்துள்ளனர். பருத்திவீரன் போல் இந்த படமும் பேசப்படும். இந்த படத்தால் விற்பனையாகும் தலா ஒரு டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து, மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருக்கும் சிறுவர், சிறுமிகளை படிக்க வைக்க இருக்கிறோம். 5 லட்சம் டிக்கெட் விற்பனையால், 5 லட்சத்தை கல்வி உதவிக்காக ஒதுக்குவோம்.

The post சிறுவர்களுக்கு கல்வி உதவி செய்யும் கிளாஸ்மேட்ஸ் படக்குழு: மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Angayar Kannan ,Madurai ,Kollywood Images ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை