×

2 வருஷத்துக்கு ஒரு கல்யாணம்: விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவும், பான் இந்தியா நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தீவிரமாக காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி மாதம் அவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் ‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். இதையடுத்து அவர்கள் மிகப்பொருத்தமான ஜோடி என்று போற்றப்பட்டனர். மேலும் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் நெருங்கிப் பழகி வந்தனர். அடிக்கடி அவர்கள் வெளியிடங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று வந்த போட்டோக்களும், வீடியோக்களும் இணையதளங்
களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. ஆனால், அவர்கள் தங்கள் நட்பு பற்றியோ, காதல் குறித்தோ இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், தனது திருமணம் குறித்து வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ள விஜய் தேவரகொண்டா, ‘வரும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்யவோ அல்லது திருமணம் செய்துகொள்ளவோ இதுவரையில் எந்தவொரு முடிவும் நான் எடுக்கவில்லை. ஆனால், ஊடகங்கள்தான் எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருமணம் செய்து வைத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தொடர்ந்து நான் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற வதந்திகளை கேட்டுக்கொண்ேட இருக்கிறேன். அவர்கள் என்னை கையோடு கையைப்பிடித்து திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் போலும். வரும் பிப்ரவரி மாதம் ராஷ்மிகாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக வெளியாகி வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

The post 2 வருஷத்துக்கு ஒரு கல்யாணம்: விஜய் தேவரகொண்டா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Devarakonda ,Hyderabad ,Pan ,India ,Rashmika Mandana ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு:...