×

ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

ஜமைக்கா :  ஜமைக்கா சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். 4 நாள் பயணமாக மேற்கு இந்திய தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவிற்கு சென்றுள்ள அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் நகரில் அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த் இரு நாட்டு கிரிக்கெட் அணிகளின் ஒத்துழைப்பை நினைவுக்கூறும் வகையில் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்தார். ஜமைக்காவில் இந்தியர்கள் வசிக்கும் பகுதிக்கு அம்பேதகர் சதுக்கம் என பெயரிடப்பட்டு அதனை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஜமைக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய ராம்நாத் கோவிந்த், பூகோளரீதியாக இரு நாடுகளும் வெவ்வேறு திசையில் அமைந்து இருந்தாலும் பரஸ்பர பொருளாதார நல்லுறவு இருப்பதாக குறிப்பிட்டார். இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஜமைக்கா தொழில் அதிபர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம்நாத் கோவிந்த், இரு நாட்டின் உறவை வலுப்படுத்தும் வகையில் பூங்கா ஒன்றை திறந்து வைத்தார். பின்னர் செடி ஒன்றை நட்டு தண்ணீர் ஊற்றினார். இந்த  நிகழ்ச்சியில் ஜமைக்கா நாட்டின் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். …

The post ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!! appeared first on Dinakaran.

Tags : President ,Ram Nath Kovind ,Jamaica ,Ambedkar Square ,Dinakaran ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!