×

பாக். ஆல்-ரவுண்டரின் திருமண போட்டோஷூட்: சமூக வலைதளத்தில் வைரல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கைனத் இம்தியாஸ் (29) என்பவரது திருமண போட்டோஷூட் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மார்ச் 30ம் தேதி தொழிலதிபர் அர்ஷ்மந்த் அலியுடன் திருமணம் செய்து கொண்டபோது எடுக்கப்பட்ட திருமண போட்டோஷாப் புகைப்படங்களில், கிரிக்கெட் பேட், பந்துடன் மணக்கோலத்தில் அணிகலன்கள் அணிந்தவாறு அவர் கொடுத்த ‘போஸ்’ அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவர் பாகிஸ்தானுக்காக 15 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். முன்னதாக கடந்த 2005ம் ஆண்டு நடந்த ஆசியக் கோப்பை போட்டியின்போது, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி விளையாடினார். இவரது அனல் பறக்கும் பந்துவீச்சைப் பார்த்துதான், கைனத் இம்தியாஸ் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டார். இதுதொடர்பாக அவர் அப்போது வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை போட்டி நடைபெற்றபோது இந்திய அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி பார்த்தேன். அவரால் ஈர்க்கப்பட்ட நான், இனிமேல் கிரிக்கெட்தான் வாழ்க்கை என்று முடிவு செய்தேன்’ என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …

The post பாக். ஆல்-ரவுண்டரின் திருமண போட்டோஷூட்: சமூக வலைதளத்தில் வைரல் appeared first on Dinakaran.

Tags : Pak ,Islamabad ,Pakistan ,Kainad Imtiaz ,Dinakaran ,
× RELATED அதிக வரிவிதிப்பால் 2019 முதல்...