×

ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 1,100 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாமல்லபுரம் அடுத்த பையனூரில் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகம், ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி, கட்டுமானவியல் மற்றும் திட்டமிடுதல் ‌கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றின் பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் கணேசன் தலைமை தாங்கினார். விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனர் அனுராதா கணேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை கிஸ்பலோ கம்பெனி நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் கலந்து கொண்டு 1,100 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், முனைவர்கள் செல்வகுமார், மணிவண்ணன், பிரபாகர். பேராசிரியர்கள் பாலகணபதி, உமா சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் விழா குழுவினர்  செய்தனர்….

The post ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Aruvakai Home ,Technical ,College ,Mamallapuram ,Bhayanur Arupatha House ,Graduation Festival for Students and Students ,University of ,Technology ,
× RELATED ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல்...