×

இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு வட நெம்மேலி பாம்பு பண்ணை தற்காலிகமாக மூடல்

மாமல்லபுரம்: இனப்பெருக்கம் காலத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி பாம்பு பண்ணை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால், பாம்புகள் பாதுகாக்கப்பட்ட பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மாமல்லபுரம், அடுத்த  வடநெம்மேலி கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையொட்டி தமிழக அரசின் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்குகிறது. பாம்பு பிடிப்போர், கூட்டுறவு சங்கத்தில் உள்ள 350க்கும் மேற்பட்ட இருளர் மக்கள் தமிழக அரசிடம் அனுமதி சான்று பெற்று, ஆண்டுதோறும் பாம்பு பிடித்து இப்பண்ணைக்கு வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்கள் பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் காலமாக உள்ளது. இதனால், வடநெம்மேலி பாம்பு பண்ணை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதையொட்டி பண்ணையில் இருந்த நல்ல பாம்பு, கண்ணாடி வீரியன், சுருட்டை வீரியன், கட்டு வீரியன் ஆகிய பாம்புகளை எந்த இடத்தில் இருந்து பிடித்து வந்தார்களோ, அதே இடத்தில் மீண்டும் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டுள்ளனர். இதனால், பாம்பு பண்ணை வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்….

The post இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு வட நெம்மேலி பாம்பு பண்ணை தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.

Tags : North Nemmeli Snake Farm ,Mamallapuram ,Vadanemmeli ,North Nemmeli ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில்...