×

மிஷன் சாப்டர் 2ம் பாகம் உருவாகும்: அருண் விஜய் தகவல்

சென்னை: லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்த ‘மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ என்ற படம் திரைக்கு வந்து வெற்றிபெற்றுள்ளது. இதையொட்டி நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் சந்தீப் கே.விஜய், ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர் பேசினர். அருண் விஜய் பேசுகையில், ‘ஒவ்வொரு படத்திலும் எனக்கு ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். இப்படத்திலும் உடல்ரீதியாக எனக்கு நிறைய சவால்கள் இருந்தன. இப்படத்தின் கதையில் இயக்குனர் விஜய் என் பலத்தை சரியாகப் புரிந்துகொண்டு நடிக்க வைத்திருக்கிறார். இப்படத்துக்கு ஆரம்பத்தில் அதிக பிரச்னைகள் ஏற்பட்டது. ஒரு படத்தை வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை மிகச்சிறப்பாக செய்திருக்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், தமிழ்க்குமரன் ஆகியோருக்கு நன்றி. 25 கோடி ரூபாய் செலவு செய்திருக்கும் இப்படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர் ஆகியோருக்கும் நன்றி. தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இப்படத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இப்படத்தின் 2ம் பாகம் குறித்து இயக்குனர் விஜய் முடிவு செய்வார்’ என்றார்.

The post மிஷன் சாப்டர் 2ம் பாகம் உருவாகும்: அருண் விஜய் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arun Vijay ,Chennai ,Amy Jackson ,Nimisha Sajayan ,Lyca Productions ,AL Vijay ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிளாஸ்டிக் சர்ஜரி செய்த எமி ஜாக்சன்: ரசிகர்கள் அதிர்ச்சி