×

கந்தர்வகோட்டை அருகே குரும்பூண்டியில் பொதுப்பணி துறை ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் குரும்பூண்டி ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குரும்பூண்டி ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இந்த ஏரிக்கு காவிரி கட்டளை வாய்க்கால் வழியாக தண்ணீர் வரத்து வந்து நிறைந்து இந்த பகுதி விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வந்தனர். நாளடைவில் இந்த ஏரியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள்.இதனால் காவிரியில் இருந்து வரும் தண்ணீர் கொள்ளளவு குறைந்ததன் காரணமாக கந்தர்வகோட்டை தாசில்தார் புவியரசனிடம் மற்ற விவசாயிகள், பொதுமக்கள் புகார் அளித்தனர்.இதனை கருத்தில் கொண்டு தாசில்தார் புவியரசன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் சேகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். இதற்கு ஆக்கிரமிப்பு செய்திருந்த விவசாயி முழு ஒத்துழைப்பு கொடுத்து ஆக்கிரமிப்புகளை தாமாக முன் வந்த எடுத்துக் கொண்டனர். இதனால் பதற்றமில்லாமல் சுமூகமாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது….

The post கந்தர்வகோட்டை அருகே குரும்பூண்டியில் பொதுப்பணி துறை ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Public Work Department ,Lake Oggression Removal ,Kurumbundi ,Kandarvakotta ,Kandarvakotta District ,Padhakti Union Kumpundi Curricula ,Kurumbundi Lake ,Public Works Department ,Lake Oggression ,Dinakaran ,
× RELATED குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதால்...