×

உசிலம்பட்டி அருகே கி.பி. 9ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி  அருகே டி.மீனாட்சிபுரம் கிராம பகுதியில் அமைந்துள்ள திருமாணிக்கம்  கண்மாயின் மடைக்கல்லில் எழுதுத்துக்கள் காணப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து  டி.மீனாட்சிபுரம் பகுதிக்கு வந்த மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்களான பிறையா, ராஜகோபாலன் ஆகியோர்  அந்த மடைக்கல்லில் ஆய்வு மேற்கோண்டனர். அப்போது மடைக்கல்லில் 12 வரிகள் கொண்ட கி.பி. 9, 10ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டில் கூடர்க்குடியை சேர்ந்த சங்கத்தட்டான் என்ற தங்க ஆபரணங்கள் செய்யும் வியாபாரி, இந்த வேம்பங்குடி மடையை கட்டியது மட்டுமல்லாது, அதை பாதுகாக்கும் பொருட்டு அதற்கு வரி கொடுத்து வந்தாகவும், இந்த மடை மூலம் வருடத்திற்கு மூன்று போகம் சாகுபடி செய்து கொள்ள குடிமக்களுக்கு நன்மை செய்வித்தான் என பொறிக்கப்பட்டிருந்தாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.மேலும் அவர்கள் கூறுகையில், ‘கி.பி. 9 , 10ம் நூற்றாண்டுகளிலேயே இப்பகுதி செழுமையாக  இருந்த சூழலில் தற்போது இந்த கண்மாய் வறண்டு காணப்படுகிறது. இந்த  கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய்களை சீரமைத்து கண்மாயில் நீரை பெருக்கினால் இப்பகுதி மக்கள் வரலாற்று பெருமைமிக்க பயன்களை பெறுவார்கள்’  என்றனர்….

The post உசிலம்பட்டி அருகே கி.பி. 9ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Uzilimbatti ,Thirumanikam ,Kanmai ,Meenatchipuram ,Uzilambatti GP ,
× RELATED கண்மாயில் மீன் திருடியோர் மீது வழக்கு