×

பேரூராட்சி அனுமதியின்றி சிமெண்ட் சாலையை வெட்டி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: தலைவர் கண்டனம்

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. காவிரி குடிநீர் இணைப்பு வீடுகளுக்கு தரப்பட்டுள்ளது. மேலும் உப்புநீர் சின்டெக்ஸ் டேங்க் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் சிலர், சின்டெக்ஸ் டேங்கில் இருந்து குழாய் மூலம் வீடுகளுக்கு இணைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. மல்லசமுத்திரம் பேரூராட்சி 14வது வார்டு பாரதியார் தெருவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து பொதுக்கழிப்பிடம் செல்லும் குழாய் பகுதியில், சிமெண்ட் சாலை வெட்டப்பட்டிருந்தது. இதனை கடந்த 29ம்தேதி பார்வையிட்ட செயல் அலுவலர், பேரூராட்சி அனுமதியின்றி சிமெண்ட சாலையை வெட்டி குடிநீர் இணைப்பு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும் இதற்கு காரணமாக இருந்ததாக, அந்த வார்டு உறுப்பினர் கணவர் மீது போலீசில் புகாரும் செய்யப்பட்டது. ஆனால், பாரதியார் சாலையில் இரவோடு இரவாக சிமெண்ட் சாலையை வெட்டி, 15 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டதால், பொது கழிப்பிடத்திற்கு  தண்ணீர் செல்லவில்லை என கூறப்படுகிறது. அனுமதியின்றி போடப்பட்ட குழாய்களின் இணைப்பை துண்டிக்க, ஊழியர்கள் சென்ற போது பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை பேரூராட்சி தலைவர் திருமலை வன்மையாக கண்டித்துள்ளார். பேரூராட்சிக்கும், அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்த சிலர் பொதுமக்களை தூண்டி விடுவதாக, அவர் குற்றம்சாட்டியுள்ளார்….

The post பேரூராட்சி அனுமதியின்றி சிமெண்ட் சாலையை வெட்டி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: தலைவர் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Thiruchengod ,Mallasamudram Paradchi ,Caviri ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...