×

விமல் நடிக்கும் தேசிங்குராஜா 2

சென்னை: விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித் குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை’, ஜெயம் ரவி நடித்த ‘தீபாவளி’, விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்பட பல படங்களை இயக்கியவர், எஸ்.எழில். 10 வருடங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் விமல் நடித்து வெளியான படம், ‘தேசிங்குராஜா’.

இந்நிலையில், தற்போது எஸ்.எழில், விமல் மீண்டும் இணைந்துள்ள படம், ‘தேசிங்குராஜா 2’. இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். முக்கிய வேடங்களில் ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம்புலி, ரெடின் கிங்ஸ்லி, புகழ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, வினோத் நடிக்கின்றனர்.

வித்யாசாகர் இசை அமைக்கிறார். ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்துக்குப் பிறகு எஸ்.எழிலுடன் வித்யாசாகர் மீண்டும் இணைந்துள்ளார். யுகபாரதி, விவேக், சுப்ரமணியம் பாடல்கள் எழுதுகின்றனர். ஆர்.பாலகுமார் இணைந்து தயாரிக்க, ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். முருகன் வசனம் எழுதுகிறார். வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்கள், பிறகு வெவ்வேறு பாதையில் பயணிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? எந்த சூழ்நிலையில் மீண்டும் அவர்கள் சந்திக்கின்றனர் என்பது கதை.

 

The post விமல் நடிக்கும் தேசிங்குராஜா 2 appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vimal ,Chennai ,Vijay ,Ajith Kumar ,Sivakarthikeyan ,Jayam Ravi ,Vishnu Vishal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குடும்பத்துடன் தற்கொலை முயற்சி- முதியவர் சாவு