×

வீரராகவர் கோயில் தேர் திருவிழா கோலாகலம்

திருவள்ளூர்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நாள் தோறும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் குளக்கரை வீதி, வடக்கு ராஜவீதி, பஜார் வீதி, மோதிலால் தெரு வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.  பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7 ம் நாளான நேற்று வீரராகவர் கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் 70 டன் எடை கொண்ட திருத்தேர் பவனி நடைபெற்றது. திருதேரில் காலை 7 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு குளக்கரை வீதி, வடக்கு ராஜவீதி, பஜார் வீதி, மோதிலால் தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக சென்று தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.  2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது….

The post வீரராகவர் கோயில் தேர் திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Veeraragavar Temple Chariot Festival Koalakalam ,Thiruvallur ,Thiruvallur Sri Vaidya Veeragawa Perumal Temple ,Veeragawa Temple Chariot Festival Kolakalam ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்