×

மாநகர பகுதியில் சுற்றி திரியும் மாடுகள் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதியில் மாடு வளர்ப்பவர்கள் அவற்றை சாலையில் விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் வடசேரி, பாலமோர் சாலை, நாகராஜா கோயில் ரதவீதிகள், புத்தன்பங்களா சாலை, கோட்டாறு, இடலாக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு கடும் இடையூராக உள்ளது. போலீசார், பொதுமக்கள் விரட்டினாலும் மாடுகள் அங்கிருந்து செல்வது இல்லை. மாறாக விரட்டிய போலீசார், பொதுமக்களை முட்ட வருகின்றன. காலை, மாலை வேளையில் பசுமாடுகள், பால் கறக்கும் வேளையில் உரிமையாளர்களின் வீடுகளுக்கு சென்றுவிடுகிறது. வீடுகளுக்கு சென்ற பசுமாடுகளிடம் இருந்து பால் கறந்தவுடன் மீண்டும் சாலைகளுக்கு வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.  நாகர்கோவில் மாநகர பகுதியில் தினமும் காலை, மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.இதனால் மாநகர பகுதியில் மாடுகள் நடமாட்டம் இருந்தால், மாடுகளை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகர ஆணையர் ஆஷாஅஜித் எச்சரித்து இருந்தார். இருப்பினும் வடசேரி, இடலாக்குடி, டென்னிசன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் தொடர்ந்து வலம் வந்தவண்ணம் உள்ளது. ஆணையர் உத்தரவிட்டும், மாடுபிடிக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த காலத்தில் மாநகர பகுதியில் பிடிக்கப்படும் மாடுகளை சரலூர் மீன்சந்தை வளாகத்தில் உள்ள மாடு கொட்டகையில் கட்டப்பட்டது. ஆனால் தறபோது பிடிக்கப்படும் மாடுகள் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மாநகர பகுதியில் சாலைகளில் மாடுகளை அவிழ்த்துவிடுபவர்கள்  மீது எந்தவித  பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சமூக ஆர்வலர்கள்  கூறி வருகின்றனர்….

The post மாநகர பகுதியில் சுற்றி திரியும் மாடுகள் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Vadseri ,Palamore Road ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...