×

கேப்டன் மில்லர் படத்துக்கு 14 இடத்தில் ‘கட்’

சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் சுமேஷ் மூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷின் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜனவரி 12 அன்று திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனிடையே படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில், படத்தில் வரும் பல வசனங்களை தணிக்கை குழு நீக்கம் செய்துள்ளனர். இதில் கெட்டவார்த்தை வரும் வசனங்களை நீக்கம் செய்துள்ளதாகவும், வேலைக்கார நாய்கள் என்ற வசனத்தை நாய்கள் என மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். படத்தில் மொத்தம் 14 இடங்களில் காட்சி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் 4 நிமிடங்கள் 36 வினாடி கட்சிகள் நீக்கப்பட்டு காட்சி நேரம் 2 மணி நேரம் 37 நிமிடங்களாக சுருங்கியுள்ளது.

The post கேப்டன் மில்லர் படத்துக்கு 14 இடத்தில் ‘கட்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Dhanush ,Arun Matheswaran ,G.V. Music ,Prakash ,Priyanka Arul Mohan ,Nivedita Satish ,John Kokkan Sumesh Moore ,Sivarajkumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உலக அங்கீகாரம் பெற்று சாதனைப் படைத்த ‘கேப்டன் மில்லர்‘!